தீபாவளி தொடங்கி பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் மக்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
தீபாவளி முடிந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. இந்நிலையில், மக்கள் போக்குவரத்திற்கு சென்னை- திருநெல்வேலி இடையே கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி வாரத்தின் 7 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையும் வர உள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு வசதியாக சென்னை- திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை இயக்கப்படுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வந்தே பாரத் ரயில் சேவை கிடைக்கப் பெறுகிறது.
நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 28-ம் தேதி வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில்(06067) எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
அதே நாள் மறுமார்க்கத்தில் திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) திருநெல்வேலியில் இருந்த மாலை 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல் தாம்பரம், விழும்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“