சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் திடீர் ரத்து: காரணம் என்ன?

சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? அடுத்து ரயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? அடுத்து ரயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Tirunelveli to Chennai Vande Bharat Train Ticket Price

​சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது,.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Vande bharat Trian | Tirunelveli  | பராமரிப்பு காரணமாக நாளை (பிப்.21,2024) சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈச்சங்காடு - மாத்தூர் ரயில்வே பாதையில் பராமரிப்பு காரணமாக நாளை சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல விருதாச்சலம் - திருச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் உள்ளிட்ட 6 ரயில் சேவைகள் நாளை (21-02-2024)ஒரு நாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisment

மேலும், தேஜஸ் விரைவு ரயில், வைகை விரைவு ரயில் உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒரு நாள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tirunelveli Vande bharat Trian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: