Advertisment

தலைமைச் செயலக கட்டடத்தில் திடீர் விரிசல்: 'அச்சப்பட தேவையில்லை' - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

"14 வருடத்திற்கு முந்தைய பழைய டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது பழைய டைல்ஸ்களுக்கு பதில் விரைவில் புதிய டைல்ஸ்கள் மாற்றப்படும், ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை ஏர் கிராக் காரணமாக டைல்ஸில் விரிசல்." என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Chennai TN Govt Secratariate Namakkal Kavignar Maligai building crack Minister EV Velu Tamil News

சென்னை தலைமைச் செயலகத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலையில் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனிடையே, தலைமைச் செயலகத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

Advertisment

இதையடுத்து, நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இதனால் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெளியே வந்த ஊழியர்களிடம் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என்றும் அது வெறும் வதந்தி. முதல் தளத்தில் உள்ள ஒரு டைல்ஸில் மட்டுமே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், வேறு எந்த பிரச்சினையும் இல்லை உள்ளே செல்லுங்கள் என்றும் கூறி ஊழியர்களிடம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைமைச் செயலக கட்டடத்தில் டைல்ஸ் சேதமடைந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை. கட்டடம் உறுதியாக உள்ளது. உடனடியாக பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தோம். டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதனால் அது சேதமடைந்துள்ளது. ஏர் கிராக் ஏற்பட்டுள்ள பகுதியில் புதிய டைல்ஸ் பதிக்க உத்தரவிட்டுள்ளேன். எனவே ஊழியர்கள் யாரும்  அச்சப்பட தேவையில்லை" என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Govt Minister EV Velu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment