6 மணி நேரம் 10 நிமிடம்… சென்னை- கோவை வந்தே பாரத் ரயில் டைமிங் இதுதான்!

சென்னை – கோவை வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

express photo
தெற்கு ரயில்வேயின் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

தெற்கு ரயில்வேயின் இரண்டாவது ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ், கோயம்பத்தூரில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு வந்தடைந்தது.

இந்த எஸ்பிரஸின் பயண நேரம் 6 மணிநேரத்தில் முடிவடையும் என்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

தென் மண்டலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நவம்பர் 11,2022 அன்று பெங்களூரு வழியாக சென்னை மற்றும் மைசூரு இடையே செயல்படுத்தப்பட்டது.

தெற்கு ரயில்வே சார்பில் அனுப்பப்பட்ட தகவலின் படி, ரயில் புறப்படும் நேரத்தை (எண்.20643) மூன்று நிலையங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது: திருப்பூர்- காலை 6.30/ காலை 6.40, ஈரோடு – காலை 7.17 / காலை 7.20, மற்றும் சேலம்- காலை 8.08/ 8.10 மணி ஆகும்.

மேலும் இந்த ரயில் சேவை, சென்னையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும். இந்த ரயில் சேவையின் நிறுத்தங்கள்: சேலம் சந்திப்பு – மாலை 6.03/ 6.05, ஈரோடு – இரவு 7.02/ இரவு 7.05, மற்றும் திருப்பூர். – இரவு 7.43/ 7.45 மணி.

இந்த ரயில் சேவை, மணிக்கு 80.31 கிமீ வேகத்தில் இயங்கும் என்றும், புதன்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – கோவை வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் விரைவு ரயில் கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு இரண்டாவது பகல் நேர ரயிலாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர்- சென்னை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னையை வந்தடையும். மேலும், சென்னையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.

சென்னை- கோவை சதாப்தி விரைவு ரயில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோயம்புத்தூரை அடைந்து, 40 நிமிடங்கள் காத்திருக்கும். பின்பு இந்த ரயில் சேவை, பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு சென்னையை வந்தடையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai to coimbatore vande bharat express details

Exit mobile version