சென்னையில் தோட்டக்கலை கொண்ட புதிய பூங்கா வருகின்ற ஜூலை மாதம் திறக்கப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அகலமான நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்குள் கற்றல் நோக்கத்திற்காக போதுமான பல்வேறு தாவரங்கள் உள்ளன.
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் (TNSAMB) கத்திப்பாரா சந்திப்பு அருகே 6.8 ஏக்கர் பரப்பளவில் 35 கோடி ரூபாய் மதிப்பில் பசுமைப் பூங்காவை அமைத்துள்ளது.
“அநேகமாக அடுத்த மாதத்திற்குள் இந்த பூங்கா பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்காக திறக்கப்படும். பூங்காவிற்கு உள்ளேயும், வெளியேயும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் செல்ல அகலமான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்குள் கற்றல் நோக்கத்திற்காக போதுமான பல்வேறு தாவரங்கள் உள்ளன. பூங்கா முழுவதும் பசுமையான சூழல் இருக்கும் வகையில் பல்வேறு வகையான மரங்கள், மலர் செடிகள், புல்வெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் செலவில் வண்ணமயமான வண்ணத்துப்பூச்சி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது,'' என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil