Advertisment

பயணிகள் கவனித்திற்கு: சென்னை - குருவாயூர் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது

author-image
WebDesk
New Update
 Chennai to Guruvayur express train service change Southern Railway Tamil News

சென்னை சென்ட்ரல் - பாலக்காடுக்கு இன்று முதல் 29-ம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

க.சண்முகவடிவேல்

Advertisment

Chennai to Guruvayur express train | southern-railway: ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:- 

சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு அக்.15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விரைவு ரயில் (16127) எர்ணாகுளம் - குருவாயூர் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல் - பாலக்காடுக்கு இன்று முதல் (அக்.13) 29-ம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

பாலக்காடு - சென்னை சென்ட்ரலுக்கு இன்று (அக்.13) முதல் அக்.30-ம் தேதி வரை புறப்படவேண்டிய விரைவு ரயில் (22652), பாலக்காடு சந்திப்பு - பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Southern Railway Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment