சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற, ஆம்னி பேருந்து கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே, சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற, ஆம்னி பேருந்து ஒன்று, கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மொத்தம் 54 பயணிகள் பயணித்த இந்த பேருந்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைகாக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்தை சரி செய்யும் பணியில், ஈடுப்டட காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“