scorecardresearch

கோடை ஸ்பெஷல்: தாம்பரம் டு கன்னியாகுமரி சிறப்பு ரயில்; கவனிங்க மக்களே!

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

southern railway

சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரியை சென்றடையும் வண்ணம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி செயல்படவிருக்கின்ற இந்த சிறப்பு ரயில் சேவை (வண்டி எண்.06051), மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும்.

மறுநாள் அதிகாலை 6.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. காலை 8.45 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில், 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட 1.3 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai to kanniyakumari special train on april 28th 2023

Best of Express