சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, தாம்பரத்தில் நின்று செல்வது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தெற்கு ரயில்வே இதைப்பற்றி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மார்ச் 29 வரை, சென்னை தாம்பரத்தில் நின்று செல்லும் இந்த ரயில் சேவையை, 9 ஆயிரத்து 275 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 27 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 343 பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை தாம்பரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால்,தேஜஸ் ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil