வங்கக் கடலில் உருவாகி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிக காற்று வீசுவதால் புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மரக்காணம் வரை மிக மிக கனமழை பெய்வது உறுதி என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாகவும் அதன் வேகம் 10 கி.மீ இருந்து 9 கி.மீ ஆக குறைந்துள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மழை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டதின்படி, வரவிருக்கும் மழை குறித்த எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
"சென்னை முதல் மரக்காணம் கடலோர பகுதிகளில் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும். கனமழையின் தொடக்க நேரம் நாளை மாறுபடலாம். காலையிலோ, மதியத்திலோ அல்லது மாலையிலோ அல்லது இரவிலோ தாமதம் ஏற்படலாம்" என்றும் கூறியுள்ளார்.
"புயல் என்று பெயரிட்டாலும் 35 கடல் மைல் வேகத்தில் வீசும் புயலாக இருக்கும். 34 கடல் மைல் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்திருந்தால் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. புயலை அறிவிக்கும் முன் பெயரிடக் கூடாது என்பதற்கு இன்று நல்ல பாடம்" என்றார்.
"எதிர்காலத்தில் உண்மையான ஃபீஞ்சல் சூறாவளி உருவாகும்போது நிறைய தவறான டிஜிட்டல் தடங்கள் விடப்படுகின்றன. புயல் போய்விட்டது என்றால் மழையும் போய்விட்டது என்று நிறைய கமெண்டுகள் வருவதை நான் பார்க்கிறேன். அது அப்படியல்ல. 2015 சென்னை வெள்ளம் குறைந்த காற்றழுத்தத்தால் ஏற்பட்டது, 2023 தூத்துக்குடி வெள்ளம் வெறும் புழக்கத்தில் இருந்து வந்தது. ஒரு பெயர் மட்டும் போய்விட்டது, மற்ற அனைத்தும் எஞ்சியுள்ளன".
"இது சும்மா ரெஃபரன்ஸ் தான், வரப்போகும் மழை வெள்ளமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். புயலின் பெயர் முக்கியமல்ல, மழைதான் முக்கியம்".
மேலும் ஊடகங்கள், பதிவர்கள் மற்றும் மக்களிடமிருந்து சமூக வலைத்தளத்தில் இந்த மழைக்கு என்று பரவி வரும் பாடல் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார், பேர் வச்சாலும் வைக்காம போமாலும் மழைவாசம், அது அடிகாம போகாது இந்த வருஷம்,அட இப்போதும் எப்போதும், முப்போதும் மழை பேசம் இந்த மனச்சோர்வு சகவாசம்... என்றும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“