தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான போக்குவரத்தை செயல்படுத்த மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு போக்குவரத்தை இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் இருந்து பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil