சென்னை- திருவனந்தபுரம் இடையே பயணிக்கும் எக்ஸ்பிரஸ் இந்த மாத இறுதியில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதுக்காடு மற்றும் திருச்சூர் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் முதல் திருவனந்தபுரம் வரை செயல்படும் எண் 12623 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25 அன்று இரவு 7.45 மணிக்கு புறப்படும். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருவனந்தபுரம் முதல் சென்னை சென்ட்ரல் வரை செயல்படும் எண் 12624 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, திருவனந்தபுரத்தில் இருந்து பிப்ரவரி 26 அன்று பிற்பகல் 3 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக, திருச்சூரில் இருந்து இரவு 8.43 மணிக்குப் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.