தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜன.15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மக்கள் பொங்கலை தங்கள் சொந்த ஊர்களில் கொண்ட ஏதுவாக எப்போதும் சிறப்பு பேருந்து, ரயில்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வார காலமே உள்ளதால் தெற்கு ரயில்வே பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்பட 4 ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி- தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில்
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் எண். 06092, திருநெல்வேலியில் இருந்து ஜன.12, 19 மற்றும் 26 ஜனவரி (ஞாயிற்றுக்கிழமை நாட்களில்) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 (திங்கட்கிழமை) மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் எண். 06091, ஜனவரி 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை வழியாக ரயில் இயக்கப்படுகிறது. ஜன.5 காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில் எண். 06093/06094 தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில்
தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் எண். 06093, தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13, 2025 அன்று (திங்கட்கிழமை) 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் எண்.06094, கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14, 2025 அன்று (செவ்வாய்கிழமை) மாலை 3.30மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12, 19ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06089) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடையும்.
ராமநாதபுரம் சிறப்பு ரயில்
ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12, 17ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்- 06104) மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11, 13, 18ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5. 15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.