சென்னை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை இன்று (புதன்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பயணிகள் தினந்தோறும் பயணித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: தீபாவளி ரயில் டிக்கெட் இன்னும் சான்ஸ் இருக்கு… காலை 8 மணிக்கு ரெடியா இருங்க மக்களே!
இந்தநிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் - திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16203) இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10 ஆம் தேதி வரை ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி - எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16204) இன்று முதல் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது.
சாம்ராஜ்நகர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16219) நேற்று முதல் அடுத்த மாதம் 10- ஆம் தேதி வரை பாகலா - திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி - சாம்ராஜ்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16220) இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை திருப்பதி - பாகலா இடையே ரத்து செய்யப்பட்டு, ஒரு மாதம் பாகலா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
திருப்பதி - எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 07657) இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை திருப்பதி -ரேணிகுண்டா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ரயில் ரேணிகுண்டாவில் இருந்து புறப்படும்.
எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 07658) நேற்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே மட்டுமே ரத்து செய்யப்பட்டு, ரேணிகுண்டா வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.