Advertisment

பராமரிப்பு பணி: சென்னை டூ திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் புறப்படும்

வண்டி எண்: 12606 காரைக்குடி - சென்னை பல்லவன் அதிவிரைவு விரைவு ரயில் காரைக்குடியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும்.

author-image
WebDesk
New Update
Chennai to Trichy super fast trains depart from Tambaram due maintenance Tamil News

வண்டி எண்: 12636 மதுரை - சென்னை வைகை அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரயில் இன்று தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது

க.சண்முகவடிவேல்

Advertisment

Train | trichy | southern-railway: திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் சில ரயில்கள் எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. ராக்போர்ட், பல்லவன் போன்ற அதிவிரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:- 

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பணிமனை, வேளச்சேரி மற்றும் விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, வண்டி எண் : 12606 காரைக்குடி - சென்னை பல்லவன் அதிவிரைவு விரைவு ரயில் காரைக்குடியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரயில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாம்பரம் சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக வரும் சென்னை - காரைக்குடி ரயில் வண்டி எண்: 12605 தாம்பரத்தில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும். 

வண்டி எண்: 12636 மதுரை - சென்னை வைகை அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை இயங்கும். இந்த ரயில் இன்று தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக வண்டி எண்: 12635 தாம்பரத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு செல்லும். 

இதேபோல் வண்டி எண்: 16159 சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடி வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இரவு 11:25 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடிக்கு செல்லும். 

வண்டி எண் : 12653 சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12:10 மணிக்கு புறப்படும். இந்த மாற்றம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 3-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என திருச்சி தென்னக ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Train Trichy Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment