Chennai Today Weather NEM latest updates : தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இன்று தமிழகம், புதுவை, காரைக்கால், கேரளா, மற்றும் மாஹே உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கும் வானிலை இவ்வாறாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை மாராதாவாடா, ஒடிசா, ஆந்திர கடற்கரை, தெலுங்கானா, கர்நடாக, தமிழகம், மற்றும் புதுவையில் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேற்கு மத்திய அரபிக்கடலில் 170 கி.மீ முதல் 180 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள்ளது.
மேலும் படிக்க : தீபாவளிக்கு மழை அடிச்சு காயப்போடப் போவது உறுதி – கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்