Chennai Today Weather Tamil Nadu Rains Monsoon 2019 Forecast Latest Updates : சென்னையின் பலபகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் ( ஜூன் 24ம் தேதி) சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் , நேற்று (ஜூன் 23ம் தேதி) இரவு 9 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி , திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லை
மழை பதிவு
ஜூன் 23ம் தேதி காலை 08.30 மணி நிலவரப்படி
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் தேவாலா பகுதிகளில் - 4 செ.மீ
கோவை மாவட்டம் வால்பாறை, வேலூர் மாவட்டம் மேலலாத்தூர் - 3 செ.மீ
காஞ்சிபுரத்தில் 2 செ.மீ
தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, தரமணி, ஸ்ரீபெரும்புதூர், பெரியார், சென்னை விமானநிலையம், காவேரிபாக்கம், கேத்தி, உதகமண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.