Advertisment

FASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் - பாவம் தான் இந்த சென்னைவாசிகள்...

FASTag lane in first day in Chennai : 1033 போர்டலில், இதுவரை 12 லட்சத்துக்கும் FASTag தொடர்பான புகார்கள் தீர்வு காணப்படாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai,Toll Plazas,nhai,Nallur Electoral District,FASTag,Cashless

Chennai,Toll Plazas,nhai,Nallur Electoral District,FASTag,Cashless, சென்னை, டோல்கேட், டோல் கட்டணம், டோல் பிளாசா, FASTag, வாகனங்கள், கார், டிரைவர், பயணம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள டோல்கேட்களில் உள்ள FASTag laneகளில், வாகனங்களில் வரிசை கட்டி நின்றதே தவிர, அவர்கள் முன்னர் கூறியபடி, டோல்கேட்களில் நிற்காமல் செல்லும் நிலை வரவில்லை என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர்.

Advertisment

நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள சிறப்பு ஸ்டிக்கர் மூலம் டோல் கட்டணம் செலுத்தப்படுவதன் மூலம், வாகனங்கள் டோல்கேட்களில் நிற்க வேண்டாம். இதன்மூலம், எங்கும் நிற்காத தடையில்லாத பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, FASTag என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் தவிர்த்த மற்ற அனைத்து வாகனங்களும் இந்த FASTag அட்டையை தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்றும், இதன்மூலமே, இனி டோல்கேட் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த சேவை இல்லாதோருக்கு இரண்டு மடங்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த FASTag, டிசம்பர் 1ம் தேதி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நேற்று (டிசம்பர் 15 ) முதல் இந்த சேவை அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், FASTag சிப் பற்றாக்குறை காரணமாக, இந்த திட்டம் 2020, ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது தாமதம் ஆனபோதிலும், இந்த FASTag சேவையை பெற்றுள்ள வாகனங்களும், டோல்கேட்களில் நின்று நிதானித்து செல்ல வேண்டிய சூழலே நிலவிவருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள டோல்கேட்களில் உள்ள FASTag laneகளிலும், வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.

மதுரவாயல் பைபாஸை இணைக்கும் வானகரம் டோல்கேட்டில் உள்ள 4 லேன்களில், இரண்டு லேன் FASTag laneகளாகவும், மற்ற இரண்டு லேன்கள், பணம் கட்டி செல்லும் லேன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 15ம் தேதி பிற்பகல்வாக்கில், FASTag திட்டத்தில் இணையாத வாகனங்கள் அதிகளவில் வந்ததால், இரண்டு லேன்களாக இருந்த FASTag lane, ஒரு லேன் ஆக குறைக்கப்பட்டது. மற்ற 3 லேன்களில், பணம் கட்டி கடக்க அனுமதிக்கப்பட்டது. இந்த குளறுபடி மாலை வரை நீடித்தது.இதன்காரணமாக, பணம் கட்டி செல்லும் லேன்கள் மட்டுமல்லாமல், FASTag laneகளிலும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு வரிசைகட்டி நின்றன.

நல்லூர் டோல் பிளாசாவிலும் இதேநிலை தான் நீடித்தது. ஏன் FASTag laneகளிலும் இத்தனை தாமதம் என்று கார் டிரைவர் ஒருவர் கேட்டதற்கு, தொழில்நுட்ப பிரச்னை, இன்னும் சில தினங்களில் இந்த இடர் களையப்படும் என்று டோல்பிளாசா ஆபரேட்டர் தெரிவித்தார்.

FASTag தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. தமிழகத்தில் 60 சதவீத வாகனங்கள் இன்னும் இந்த திட்டத்தில் இணையவில்லை. தமிழகத்தில் நாள்தோறும் 6 லட்சம் வாகனங்கள் டோல்கேட்களை கடந்து வரும் நிலையில், அவற்றில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான வாகனங்கள் மட்டுமே FASTag திட்டத்தில் இணைந்துள்ளன.FASTag சேவையை பெற்றுள்ள வாகனங்களும், டோல் கட்டணத்தை இரண்டு முறை செலுத்த வேண்டியுள்ளதாக மற்றொரு கார் டிரைவர் தெரிவித்தார்.

FASTag தொடர்பான புகார்களை தெரிவிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)), 1033 என்ற டோல்ப்ரீ எண்ணை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த போர்டலில், இதுவரை 12 லட்சத்துக்கும் புகார்கள் தீர்வு காணப்படாமல் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toll Gate Nhai Fastag Vehicles
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment