Advertisment

மெட்ரோ ரயில் பணி- சாந்தோமில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

காரணீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

author-image
WebDesk
New Update
Trichy traffic

Chennai Traffic Diversion

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சிஎம்ஆர்எல் லைட் ஹவுஸ் ஸ்டேஷன் மெட்ரோ ரயில் பணி காரணமாக சாந்தோம் நெடுஞ்சாலையில் நாளை (மார்ச் 9) முதல் ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

Advertisment

அதன்படி, காந்தி சிலையிலிருந்து (காமராஜர் சாலை) சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பில் லூப் ரோடு, பட்டினப்பாக்கம் பேருந்து டெர்மினஸ், தெற்கு கால்வாய் வங்கிசாலை சந்திப்பு (சாந்தோம் ஹை ரோடு - டிஜிஎஸ் தினகரன் சாலை சந்திப்பு) நோக்கி திருப்பிவிடப்படும்.

காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் கட்டாயம் இடதுபுறம் திரும்பி லைட் ஹவுஸ் வழியாக இலக்கை அடையலாம்.

காரணீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

லூப் ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை அடுத்த 3 மாதங்களுக்கு ஒருவழி பாதையாக இருக்கும், என்று சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment