இன்று (நவம்பர் 22ஆம் தேதி) ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காவல் துறை கூறியிருப்பதாவது:
சென்னை டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ ரெயில் திட்டபணி (கட்டம்2) (4 வதுவழித்தடம்) நடைபெற்று வருகிறது.
இப்பணி காரணத்தால் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நவம்பர் 22ஆம் தேதியில் இருந்து அடுத்த வருடம் பிப்ரவரி 11ஆம் தேதி வரை போக்குவரத்து பாதையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னையும் பெங்களூரையும் இணைக்கும் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் எல்லோரும் பூந்தமல்லி நெருங்கும்போது சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி செல்ல வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை வலியுறுத்துகின்றனர்.
வண்டலூரில் இருந்து வரும் வாகனங்கள் பூந்தமல்லி நசரபேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை அடைந்து செல்லலாம்.
மேலும், பூந்தமல்லி நசரத்பேட்டை அருகில் சென்னை வெளி வட்ட சாலை பாலத்தில் இருந்து இடது புறம் திரும்பாமல், சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராக சென்று கோலப் பஞ்சேரி சுங்கசாவடிக்கு முன்பு வலது புற 'யு'வடிவில் திரும்பி, சென்னை வெளி வட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து, பின்னர் பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையினை அடைந்து பயணிக்கலாம்.
மேலும், அம்பத்தூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளரின் கைப்பேசி எண் 9444212244 -ஐ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
காவல் ஆய்வாளர், T12 பூந்தமல்லி போக்குவரத்து அலைபேசி எண் 9600009159-ஐ தொடர்பு கொள்ளலாம். ஆவடி கட்டுப்பாட்டு அறை எண்: 7305715666-ஐ தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil