மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னை நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது.

இதைப்பற்றி வெளியிட்டுள்ள செய்தியில், குறிப்பிட்டுள்ளதாவது, “சென்னை மெட்ரோ ரயில் பனி காரணமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் சி.எம்.ஆர்.எல்.ஆள் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நன்குச் செயல்பட்டதால் சி.எம்.ஆர்.எல்., கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் டி.டி.கே., சாலையை நோக்கி வழக்கம் போல் செல்லலாம். டி.டி.கே., சாலை சந்திப்பில் இருந்து ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து கோட்டூர்புரம் பாலத்தை நோக்கி செல்ல அடையார் கிளப் கேட் சாலை
வழியாக இடதுபுறம் திரும்பி ஏ.பி.எம்.அவென்யூ மற்றும் ட்ரன் புல்ள் சாலை விரிவாக்கம் வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பு வழியாக அண்ணாசாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் டி.டி.கே.சாலை வழியாக வலதுபுறம் திரும்பி ஸ்ரீராம் நகர் தெற்கு தெரு, ஸ்ரீராம் நகர் மேற்கு தெரு, செனோடப் 2வது லேன் மற்றும் ஜி.கே. மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
அடையாறு போட் கிளப் கேட் சாலை, முதல் அவென்யூ போட் கிளப் சாலை மற்றும் போட் கிளப் சாலை ஆகியவை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சேமியர்ஸ் சாலையில் இருந்து போட் கிளப் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கொண்ட வாகனங்கள் அடையாறு போட் கிளப் கேட் சாலை வழியாக செல்லலாம்.
ஏ.பி.எம். அவென்யூ மற்றும் டர்ன் புல்ஸ் விரிவாக்கம் ஆகியவை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாகனங்கள் அடையார் கேட் கிளப் சாலையில் இருந்து கொடூட்புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லலாம். வாகனங்கள் ஜி.கே.மூப்பனார் மேம்பால சர்வீஸ் சாலையிலிருந்து டர்ன் புல்ஸ் விரிவாக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வாகனங்கள் ஜி.கே.மூப்பனார் மேம்பால சிக்னல் சந்திப்பில் இருந்து நேராக சேமியர்ஸ் சாலையில் சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.