scorecardresearch

சென்னை மாம்பலத்தில் மெட்ரோ பணிகள்: ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மாம்பலத்தில் உள்ள பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் இருந்து ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை இன்று முதல் செயல்படுகிறது.

சென்னை மாம்பலத்தில் மெட்ரோ பணிகள்: ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடைபெறுவதால், சென்னை மாம்பலத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மாம்பலம் பிரதான சாலைகளில் (கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம்) மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் ஒரு வாரகாலத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மேலும், இந்த சோதனை நன்கு செயல்பட்டதால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கோரிக்கையின் படி இந்த திட்டம் அடுத்த ஆண்டு(2024) ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

மாம்பலத்தில் உள்ள பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் இருந்து ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை இன்று முதல் செயல்படுகிறது.

மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல வேண்டும் என்றால், தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல வேண்டும் என்றால், ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic diversion at tnagar due to metro phase 2 construction

Best of Express