scorecardresearch

சென்னை கால்வாய் கட்டுமானம்: ஈ.வி.ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை ஈ.வி.ஆர்.சாலையில் கால்வாய் கட்டுமானப் பணி மேற்கொள்வதால், தற்போதுள்ள போக்குவரத்து முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

chennai traffic diversion

சென்னை நாயர் பாலம் மற்றும் தாசபிரகாஷ் சந்திப்புக்கு இடையே ஈ.வி.ஆர்.சாலையில், நெடுஞ்சாலைத் துறையினர் கால்வாய் கட்டுமானப் பணியை மேற்கொள்வதால், தற்போதுள்ள போக்குவரத்து முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகள் ஏப்ரல் 1ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஈ.வி.ஆர்.சாலையில் செல்லும் வாகனங்கள், நாயர் பாலம் சந்திப்பு நோக்கி தாசபிரகாஷ் சந்திப்பிற்குள் நேராக செல்ல அனுமதிக்கப்படாது.

அந்த வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பில் இருந்து ராஜா அண்ணாமலை சாலை (இடது திருப்பம்), அழகப்பா சாலை சந்திப்பு (வலதுபுறம்), மீண்டும் அழகப்பா சாலை (வலதுபுறம்), டாக்டர் நாயர் பாலம், ஈவிஆர் சாலை ஆகிய வழியில் செல்ல அனுமதிக்கப்படும்.

ஆனால், நாயர் பாலம் சந்திப்பில் இருந்து (வெளியே செல்லும் போக்குவரத்து) தாசபிரகாஷ் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic diversion evr saalai from 1st to 3rd april