scorecardresearch

குடியரசு தின விழா: சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

வரும் 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவிற்கு சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

குடியரசு தின விழா: சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

இந்தாண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி வரும் குடியரசு தின விழாவிற்கு தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்வலத்திற்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம்.

மேலும், இந்த ஒத்திகையை நடைபெறும் நாட்களையொட்டி சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வரும் 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவிற்கு சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்: “சென்னையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் வரும் 26ஆம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஜனவரி 20, 22, 24, 26 ஆகிய 4 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதி கிடையாது. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படுகிறது. வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள், கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயிண்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவகாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள். (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பில் இராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்படும். இராயபேட்டை ஒன் பாயிண்ட், ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 21G இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு. அவை இராயப்பேட்டை மேம்பாலம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 45B மற்றும் 12G ஆகியவை நீல்கிரிஸ் சந்திப்பு மியூசிக் அகாடமி, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை, வழியாக தற்காலிக பேருந்து நிறுத்தமான சிந்தாதரிப்பேட்டை இரயில் நிலையம் செல்லலாம்.

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும். டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.

அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட் அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜி.பி.ரோடு, இராயபேட்டை மணிகூண்டு. வெஸ்ட் காட் சாலை. GRH இராயபேட்டை ஒன் பாயிண்ட், நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம். வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic diversion for four days at kamarajar saalai on republic day

Best of Express