scorecardresearch

கோடம்பாக்கம் பயணிகள் உஷார்: ஒரு வாரம் இந்த சாலையில் நீங்கள் போக முடியாது

கோடம்பாக்கம் ஆற்காடு சாலை யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

chennai traffic diversion

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் காரணத்தால், கோடம்பாக்கத்தில் நாளை மே 6ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை, சோதனை அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலை யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (மே 6ஆம் தேதி) முதல் 12-ந்தேதி வரையிலான ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இதுபற்றி சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள், டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு நேராக சென்று ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.

யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது.

மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, 2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராயநகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2-வது அவென்யூ வரை தற்போது அமலில் உள்ளது. மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை மற்றும் பாளையக்காரன் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

இந்த நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்”, இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic diversion kodambakkam from may 6th to 12th