மேம்பாலப் பணிகள்: சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம்

போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலைக்கு செல்லும் எம்.டி.சி., பேருந்துகள் மேட்லி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பர்கிட் சாலையை நோக்கிச் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலைக்கு செல்லும் எம்.டி.சி., பேருந்துகள் மேட்லி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பர்கிட் சாலையை நோக்கிச் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai traffic diversion

சென்னை திநகரில் மேம்பாலப் பணிகளின் காரணமாக பெருநகர போக்குவரத்து காவல்துறை, சில போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை திநகர் வெங்கட்நாராயணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பர்கிட் சாலையில் இடதுபுறம் திரும்பி மூப்பரப்பன் சந்திப்பை நோக்கிச் செல்லலாம்.

போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலைக்கு செல்லும் எம்.டி.சி., பேருந்துகள் மேட்லி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பர்கிட் சாலையை நோக்கிச் செல்ல அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.நகர் மேட்லி சந்திப்பை அடைய, அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி புதிய போகம் சாலை, வலப்புறம் முத்துரங்கன் சாலை, தி.நகர் பஸ் டிப்போ உஸ்மான் சாலை அருகே வலதுபுறம் என்ற வழியில் செல்லலாம்.

Advertisment
Advertisements

பர்கிட் சாலையில் இருந்து, மேற்குறிப்பிட்ட இரண்டு வழித்தடங்களிலிருந்தும் MTC பேருந்துகள் மூப்பரப்பன் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, இணைப்பு சாலை அல்லது 5வது பிரதான சாலை வழியாக சிஐடி நகர் ரவுண்டானா வழியாக அண்ணாசாலைக்கு செல்லலாம்.

ஜே.ஒய்.எம் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பரப்பன் சாலை வழியாக (5வது பிரதான சாலை அல்லது இணைப்பு சாலை வழியாக) அண்ணாசாலை மற்றும் சிஐடி நகரை அடையலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Traffic Diversion Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: