திமுக பொதுக்குழு கூட்டம், மெட்ரோ பணிகள், விழிப்புணர்வு மரத்தான் ஆகிய நிகழ்வுகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நீடிக்கும். சென்னை கிரீன்வேஸ் சாலை –டி.ஜி.எஸ் தினகரன் சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ வழிதடத்தின் பணிகள் நடைபெறுவதால் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இது மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கும்.
காரமராஜர் சாலை சீனிவாச அவென்யூ சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை கீரீன்வேஸ் ரோடு சந்திப்பு வரை ஒரு வழிபாதையாகவும், சீனிவாச அவென்யூ மற்றும் ஸ்கூல் ரோடு முழுவதும் ஒரு வழி பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து இடையூராக எந்த வாகனமும் நிறுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளி, ஈ.வி.ஆர்.சாலை, ஷெனாய் நகரில் அரசியல் கூட்டம் நடைபெறுவதால், ஈ.வி.ஆர் சாலையில் உள்ள அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
அண்ணா நகர் ரண்வுண்டானா. கே4 அண்ணாநகர் பி.எஸ், 3வது அவென்யூ எக்ஸ் புதிய ஆவடி சாலை சந்திப்பு, நியூ ஆவடி சாலை, கீழ்பாக்கம் கார்டன் சாலை மற்றும் பிளவர்ஸ் சாலை வழியாக ஈ.வே.ரா சாலையை அடையலாம்.
ஈ.வே.ரா சாலையில் இருந்து வெளிவரும் வாகனங்கள், ஈ.கா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருசாமி பாலம், ஸ்டெர்லிங் சந்திப்பு, ஸ்டெர்லிங் சாலை வழியாக செல்லலாம். புல்லா அவென்யூ சந்திப்பில் திரு.விக. பார்க், கீழ்பாக்கம் கார்டன் சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம்.
நியூ ஆவடி சாலை எக்ஸ் ஹால்ஸ் சாலை சந்திப்பில் இருந்த ஈ.வெ.ரா சாலை நோக்கி பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாது. நியூ ஆவடி சாலையில் இருந்து டெய்லர்ஸ் சாலையை நோக்கி ஹால்ஸ் சாலை வழியாக செல்ல முடியாது. சேத்துப்பட்டு சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சாலையில் வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம் சந்திப்பிலிருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி அனுமதிக்கப்படாது. நமச்சிவாயபுரம் சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் மற்றும் சேத்துப்பட்டு சந்திப்பு நோக்கி செல்லலாம்.
ஆவடி, அம்பத்தூர், ஓ.டி.யில் இருந்து கோல்டன் காலனி வழியாக திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் டி.வி.எஸ் லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் உள்ள இ4 அபிராமபுரம் போக்குவரத்துக்கு உட்பட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட துர்க்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழுப்புணர்வு நடைபயிற்சி நடைபெறுகிறது.