சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காணும் பொங்கலுக்கு காவல்துறை அறிவிப்பு

காணும் பொங்கலையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காணும் பொங்கலுக்கு காவல்துறை அறிவிப்பு

இந்தாண்டு பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், சென்னை போக்குவரத்து பாதைகளில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

நாளை, காணும் பொங்கலையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதைப்பற்றி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 17ஆம் தேதியன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தத்தின் போது, சென்னையின் மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் கூட்டநெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கட்டுப்படுத்த போக்குவரத்து மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், நாளை காமராஜர் சாலை பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்காத பட்சத்தில் போக்குவரத்து மாற்றம் ஏற்படாது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில், நாளை மக்கள் கூட்டநெரிசல் அதிகரிக்கும்போது, வடக்கு திசையில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை – முத்துசாமி பாயினட் – வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை பெரியார் சிலை – அண்ணாசிலை – வெல்லிங்டன் பாயின்ட் – ஸ்பென்சர் சந்திப்பு – பட்டுளாஸ் சாலை – மணி கூண்டு – GRH பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக பயணிக்கலாம்.

அடையாறிலிருந்து காமராஜர் சாலை வழியில் வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு, பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை வழியாக பயணிக்கலாம்.

மேலும் பாரதி சாலை வழியாக செல்லும் வாகனங்கள் கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வழியாக செல்ல தடை எதிர்கொள்ளும். மேலும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து சாலை மாற்றம் பரிக்ஷயம் ஆகாத நிலையில், பெருநகர போக்குவரத்து காவல்துறை சாலை மாற்றங்களை 10 நிமிடங்களுக்குள் Google வரைபடத்தில் RoadEaseapp மூலம் தகவல்களை பரிமாறுவதாக கூறியுள்ளனர்.

இதன் மூலம் வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை கூகுள் மேப் கண்காணித்து செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாகன ஓட்டுநர்கள் அனைவரும் இந்த முடிவிற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic diversion tomorrow for kaanum pongal 2023

Exit mobile version