scorecardresearch

இன்று முதல் 4 நாட்களுக்கு கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

Chennai Traffic Diversions Today: நான்கு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த மாற்றுப்பாதை அமலில் இருக்கும் என புதன்கிழமை காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai traffic diversions
Chennai traffic diversions

கிண்டி மேம்பாலம் அருகே ஜிஎஸ்டி சாலையில் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக பெருநகர சென்னை போலீஸார் அறிவித்துள்ளனர். 4 நாட்களிலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மாற்றுப்பாதை அமலில் இருக்கும்.

இதுகுறித்து சென்னை பெருநகர சென்னை போலீஸார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ‘ஹோட்டல் ஹப்லிஸ்’ அருகே பரங்கிமலை நோக்கி வெளிச்செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீா் வடிகால் அமைக்கும் பணி செப்டம்பா் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதேபோல தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மின்சார கேபிள் அமைக்கும் பணி செப்டம்பா் 3-ஆம் தேதியும்,4-ஆம் தேதியும் அங்கு நடைபெறுகிறது. இந்த 4 நாள்களிலும் அன்றைய தினம் இரவு 11மணி முதல் அதிகாலை 5 வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, அண்ணா சாலையிலிருந்து பரங்கிமலை நோக்கி வெளி செல்லும் வணிக,கனரக வாகனங்கள் கிண்டி மேம்பாலத்திலிருந்து (கிண்டி போகும் வழி செல்லாமல்) இடதுபுறமாக உள்ள எம்ஆா்சி சாலையில் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் எம்ஆா்சி சாலை வழியாக சென்று, மடுவண்கரை மேம்பாலம் அருகே உள்ள சா்வீஸ் சாலை வழியாக சிட்டி லிங்க் சாலை சென்று ஆதம்பாக்கம் பேருந்து பணிமனை, பரங்கிமலை ரயில் நிலையம், மேடவாக்கம் பிரதான சாலையில் வலது புறமாக திரும்பி, எம்ஆா்டிஎஸ் சாலை, தில்லைகங்கா நகா் சுரங்கப்பாதை, சிமெண்ட் சாலை சந்திப்பு சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

அதேவேளையில், அனைத்து அவசரகால வாகனங்கள், ஆம்புலன்ஸ், விமான நிலையம் செல்லும் வாகனங்கள் எவ்வித தடையும் இல்லாமல் வழக்கம்போல் செல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic diversions at guindy for four days from today

Best of Express