Advertisment

ரூ50 முதல் ரூ1 லட்சம் வரை... போக்குவரத்து விதி மீறல்களுக்கு புதிய அபராத தொகை அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் புதிய போக்குவரத்து விதிகளை சென்னை போக்குவரத்து போலீசார் அமல்படுத்த முடிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரூ50 முதல் ரூ1 லட்சம் வரை... போக்குவரத்து விதி மீறல்களுக்கு புதிய அபராத தொகை அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் புதிய போக்குவரத்து விதிகள்

இன்று நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் புதிய போக்குவரத்து விதிகளை சென்னை போக்குவரத்து போலீசார் அமல்படுத்த முடிவு செய்துள்ளார்.

Advertisment

இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்து எண்ணிக்கை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வருத்தத்திற்குரியது. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 பேர் சாலை விபத்தினால் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

publive-image

சென்னையில் மட்டும் சாலை விபத்துகளில் 1026 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு நீதிமன்றங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே காரணம் என்று, அதனைத் தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து சென்னையில் இன்று முதல் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வந்தனர். ஆனால் தற்போது டிரைவர் குடிபோதையில் இருந்தால், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரிடமும் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் குடிபோதையில் ஓட்டினால், அவருடன் பயணிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிகள் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதல் முறை ரூ.500 அபராதமும், இரண்டாவது முறை தவறியதற்கு ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும்.

பிற மாநிலத்திலிருந்து மோட்டார் வாகனத்தை இடம்மாற்றி, 12 மாதங்களுக்குள் மறு பதிவுக்கு விண்ணப்பிக்கத் தவறினால், முதல் முறை ரூ.500 அபராதமும், இரண்டாவது முறை தவறியதற்கு ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும்.

இது போல, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கு தவறினால், போக்குவரத்து அறிகுறிகளை வேண்டுமென்றே அகற்றுதல், மாற்றுதல், சிதைத்தல் அல்லது சேதப்படுத்துதல், கட்டாய போக்குவரத்து அறிகுறிகளை மீறுதல், பொது இடத்தில் ஆபத்தான நிலையில் மோட்டார் வாகனத்தை விடுதல், ஓட்டுநரின் கட்டுப்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு நபரையும் நிற்க அல்லது உட்கார அல்லது எதையும் வைக்க அனுமதிப்பது, டிரைவிங் லைசென்ஸ், கண்டக்டர் உரிமம், பதிவுச் சான்றிதழ், அனுமதிச்சீட்டு, உடற்தகுதி சான்றிதழ் மற்றும் காப்பீட்டுச் சான்றிதழின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க தவறுவது போன்ற செயல்களை செய்தால், முதல் முறை ரூ.500 அபராதமும், இரண்டாவது முறை தவறியதற்கு ரூ.1500 அபராதமும் விதிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை வழங்கினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் மோட்டார் வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

பதிவு இல்லாமல் மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தினால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.2500, இரண்டாவது முறையிலிருந்து ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டும் போது கைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதலின் மூலம் பிடிபட்டால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000, இரண்டாவது முறையிலிருந்து ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

மோட்டார் வாகனங்களின் உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது விற்பனையாளராக இருப்பது, விதிகளுக்கு முரணாக ஒரு மோட்டார் வாகனத்தை விற்பனை செய்வது/வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 182எ(1) விதிக்கு கீழ், ஒவ்வொரு மோட்டார் வாகனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Police Tamil Nadu Government Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment