scorecardresearch

அபராதம் செலுத்தவில்லை என்றால் அசையும் சொத்துக்கள் பறிமுதல்: இவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால், அவர்களின் வாகனம் மட்டுமல்ல, அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடி அபராதத் தொகை
வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.

போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகை கட்ட வேண்டும் என்ற விதிமுறை தற்போது கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதில் இனிமேல் அபராதத் தொகை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் அல்லது இதர வாகனங்கள் அல்லது அசையும் சொத்துக்கள் நீதிமன்றங்கள் மூலமாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai traffic police collect rs 3 5cr from drunken drivers