ஞாயிற்றுக்கிழமை காலை மெரினா கடற்கரை அருகே, 8 சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்களுக்கு, அவசர மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்தது.
அபராதம் விதிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார்களில் நான்கு ஃபெராரிகள், இரண்டு லம்போர்கினிகள், ஒரு போர்ஸ் மற்றும் ஒரு பிஎம்டபிள்யூ ஆகியவை அடங்கும், அவற்றில் சில புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா பதிவெண் கொண்டவை.
பல கோடி மதிப்பிலான கார்களில் சாலை விதிமீறியவர்கள், அபராதத் தொகையை அந்த இடத்திலேயே செலுத்திய பிறகே கார்கள் எடுத்து செல்ல விடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாமல்லபுரத்தில் இருந்து வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது, நேப்பியர் பாலம் அருகே காமராஜர் சாலை வழியாக காலை 9 மணியளவில் போக்குவரத்து காவல்துறையிடம் விதிமீறலினால் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சில கார்களில் தவறான நம்பர் பிளேட் இருந்ததால், தலா 500 ரூபாயும், அதிக வேகம் மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காக தலா 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஸ்பாட்டில் அபராதம் வசூலிக்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil