ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான ட்வீட்-ஐ ரீ-ட்வீட் செய்த சென்னை காவல்துறை, சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அதை நீக்கியது.
காஷ்மீரி இந்து எனும் ட்விட்டர் பக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலம் தொடர்பான காணொலி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ரீ-ட்வீட் செய்தது. இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இதுதான் திராவிட மாடலா எனவும் சிலர் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த ட்வீட்-ஐ போக்குவரத்து காவல்துறை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன.
முன்னதாக அக்.2ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. தற்போது காவல்துறை ரீட்வீட் செய்தது, ஆக.5ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அணிவகுப்பு ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“