சென்னை முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூலாக அபராதத்தை காவல்துறை வாங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஆகையால், இந்த கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

வாகன ஓட்டுநர்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும், கட்டாய அபராதம் விதித்து பண வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் சட்டையில் கேமரா பொருத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தது.
கண்காணிக்கப்பட்டதில் தெரியவந்தது என்னவென்றால், கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வளர் ஜெயக்குமார் மற்றும் காவலர் மணிகண்டன் ஆகியோர், கோயம்பேடு சந்தைக்கு வரும் வாகனங்களை மடக்கி கட்டாயமாக பணம் வசூல் செய்துள்ளனர். இதனால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர், இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil