இன்று காலை 2 நிமிடங்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என காவல்துறை தெரிவித்தது.
ஜனவரி 30-ம் தேதி தியாகிகள் தினம். இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் 2 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் 2 நிமிடம் சென்னை முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கை:
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30 ம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று காலை 11 மணி முதல் 11.02 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
மேலும் அச்சமயத்தில் சென்னை முழுவதும் போக்குவரத்து இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்படும். எனவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.