Advertisment

பயணிகள் கவனத்திற்கு! சென்னை- திருவனந்தபுரம் மெயில் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

இந்த ரயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10 - 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.

author-image
WebDesk
New Update
railway Train

Chennai Trivandrum mail timing

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை- திருவனந்தபுரம் மெயில் ரயில் ஜூலை 15 முதல் 15 நிமிடங்கள் முன்பாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Advertisment

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே மெயில் ரயில் (எண்: 12623/ 12624) தினமும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ரயில் ஜூலை 15-முதல் சென்ட்ரலிலிருந்து வழக்கமாக இரவு 7.45 பதிலாக இரவு 7.30 மணிக்கு (15 நிமிடங்கள் முன்பு) புறப்பட்டு மறுநாள் காலை 11.30 பதிலாக காலை 11.20 மணிக்கு (10 நிமிடங்கள் முன்பு) திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கத்தை விட 10 - 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.

மறுமார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் ரயில் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை’, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment