சென்னையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் வாசுதேவன் (66) என்பவர், இந்தி டியூசன் நடத்தி வருகிறார்.
சம்பவம் நடந்த அன்று வாசுதேவன் தனது மாணவர்கள் அனைவரையும் வகுப்புகளுக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பியதாகவும், சிறுவனை மட்டும் தங்கச் சொன்னதாகவும் போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.
பின்னர் சிறுவனை தனி அறைக்கு அழைத்துச் சென்ற வாசுதேவன், அவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீடு திரும்பிய சிறுவன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினான்.
புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாசுதேவனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“