Advertisment

கூடுதல் வசதி, பராமரிப்பு செலவு அதிகம்...  உயரும் கிண்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அதிக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

author-image
WebDesk
New Update
Chennai Vandalur zoo, Guindy park Ticket rate

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது, ​​பூங்காவில் 170 இனங்களைச் சேர்ந்த சுமார் 1,977 வன விலங்குகள் உள்ளன.

Tamilndua news in Tamil: சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா (Arignar Anna Zoological Park - AAZP) உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். 

Advertisment

நாட்டிலேயே மிகப் பெரியது மற்றும் பழமையானது என்கிற பெருமையை பெற்றுள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, அதன் அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால், 'பெரிய மிருகக்காட்சிசாலை' பிரிவில் அதிக மேலாண்மை திறன் மதிப்பீட்டு மதிப்பெண்ணுடன் நாட்டின் 'சிறந்த மிருகக்காட்சிசாலை' என மதிப்பிடப்பட்டது. 

தற்போது, ​​பூங்காவில் 170 இனங்களைச் சேர்ந்த சுமார் 1,977 வன விலங்குகள் உள்ளன. மேலும் அதன் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவை உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களுக்கான சங்கம் (WAZA) போன்ற முன்னணி நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து விரிவுபடுத்தியுள்ளது.

இந்தப் பூங்கா வன விலங்குகளை, குறிப்பாக மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இந்த பூங்கா மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் சிறப்புக்கான மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும், விலங்குகளை சிறந்த முறையில் பராமரிக்கவும் அரசு முயற்சிப்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சில உயிரியல் பூங்காக்களில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21வது ஆட்சிமன்றக் கூட்டத்தில் நான்கு உயிரியல் பூங்காக்களிலும் டிக்கெட் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டு, அதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:-  Ticket rates set to go up at Chennai’s Vandalur zoo, Guindy park

இந்நிலையில், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிருகக்காட்சிசாலைகளில் பார்வையாளர் கட்டணத்தை திருத்துவது அவசியம். மிருகக்காட்சிசாலை விலங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார். 

சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, நடுத்தர வகை உயிரியல் பூங்கா, சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா மற்றும் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா போன்ற சிறிய வகை உயிரியல் பூங்காக்கள் பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தும் மற்ற உயிரியல் பூங்காக்கள் ஆகும்.

திருத்தப்பட்ட கட்டமைப்பின்படி, பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அதிக நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வளாகத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150 ஆகவும், ஏசி இல்லாத சஃபாரி வாகனங்களுக்கு ரூ.50ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வீடியோ கேமராவைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் ரூ. 750 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி இனி ஒரு மணிநேர அடிப்படையில் பார்க்கிங் கட்டணம் இருக்காது. சைக்கிள் மற்றும் ரிக்ஷாக்களுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இலவசம்.

கடந்த 2017-ஆம் ஆண்டு வரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவருக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாய் இருந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்ட கட்டணம் , 2020 நவம்பர் மாதம் முதல் 90 ரூபாயாக இருந்து வந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நுழைவு கட்டணம் மீண்டும்  உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment