டெல்லிக்கு நிகராக பெயரெடுத்த சென்னை! வெக்கப்படனும் சென்னை மக்களே!

அரசு பேருந்துகளில் பயணம் செய்வதை பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதும் இந்த நிலைக்கு காரணம் என்கிறது டேட்டா.

ஒவ்வொரு வருடம் தீபாவளியும், வசந்த விழாவும் முடிந்த கையோடு ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து கிளம்பி வரும் மணற்புயல்களும், புகை மூட்டங்களும் டெல்லியின் காற்றினை டேமேஜ் ஆக்கிவிட்டு சென்றுவிடும். அந்த தூசு, மாசு, குப்பை, புகையில் மக்கள் மூச்சுவிட்டு உயிர்வாழ்வதே சவாலான காரியமாக இருக்கும். ஆனால் இது போன்ற எந்தவிதமான சம்பிரதாயங்களும் இங்கே கிடையாது. இருந்தாலும் காற்று மாசில் டெல்லிக்கு நிகராக போட்டியிட்டுக் கொண்டு சீன் காட்டுகிறது சென்னை மாநகரம். டெல்லிக்கு அருகே கடலும் இல்லை. ஆனால் இங்கு கடலே இருந்தும் நிலை இது தான்.

டெல்லிக்கு அடுத்தபடியாக வாகனங்களால் ஏற்படும் மாசு சென்னையில் தான பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை (Centre for Science and Environment (CSE)) தகவல்களை வெளியிட்டுள்ளது.  நாள் ஒன்றுக்கு சென்னை வாகனங்களால் 3200 டன்கள் கார்பன் டை ஆக்ஸைடு காற்றில் கலக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது சி.எஸ்.இ.

14 இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் நமக்கு இந்த தகவல்களை வழங்குகிறது. கார்பன் – டை – ஆக்ஸைடை தவிர்த்து ஆயிரம் கிலோ பர்டிகுலேட் எமிசனும், 12 ஆயிரம் கிலோ நைட்ரன் டை ஆக்ஸைடும் வெளியாகிறது. இந்த இரண்டு அளவீடும் தேசிய அளவில் இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தினை சென்னைக்கு வழங்கியுள்ளது.

இந்த சோதனை முடிவுகள் பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன பயன்பாடு, வாகன பயன்பாடுக்கான தேவைகள், மக்கள் தொகை, பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு பேருந்து சேவைகள், நடைபயணம், சைக்கிள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் அதன் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 14 நகரங்களில் நிறைய நகரங்களில் பொதுமக்கள் அரசு பேருந்துகளை பயணத்திற்காக உபயோகப்படுத்துவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது இந்த அறிக்கை. 2000-2001 வரையிலான காலகட்டத்தில் இருந்த அரசு பேருந்துகள் பயன்பாடு 2030-31 காலத்தில் 44.7% ஆக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close