Advertisment

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரயில் சேவை 7 மாதங்களுக்கு நிறுத்தம், புதிய நேரம் என்ன?

அடுத்த 7 மாதங்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Chennai Velachery Chindathiripet New Train Time

சென்னை எழும்பூர்-கடற்கரை இடையேயான 4-வது பாதை சுமார் ரூ.280 கோடி மதிப்பில் 4 கி.மீ.தொலைவுக்கு அமைகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது.

Advertisment

இதன் காரணமாக, சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) முதல் ரத்து செய்யப்பட்டது. அடுத்த 7 மாதங்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்படும்.

வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் புறப்படும். இதுபோல, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து முதல் ரயில் காலை 5.40 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்படும்.

சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே காலை 5.40 மணி முதல் 10.40 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10.55 மணி வரையிலும் 25 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.

வேளச்சேரி- சிந்தாதிரிப்பேட்டை மார்க்கத்தில், காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.25 முதல் இரவு 10.15 மணி வரையிலும் 25 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.

மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

தினமும் 80 சேவைகள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஐரியா தெரிவித்தார். சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சேப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே அனைத்து ரயில்களும் ஒரே பாதையில் இயக்கப்படுவதால், 25 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் 11 ரயில்களும், திருவள்ளூர்/ஆவடியில் இருந்து வேளச்சேரி செல்லும் 48 ரயில்களும் கடற்கரை நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும், வேளச்சேரிக்கு இயக்கப்படாது.

எனவே பயணிகள் கடற்கரை ரயில் நிலையத்தை அடைய கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குமாறு ரயில்வே, பெருநகர போக்குவரத்து கழகத்தை (MTC) கேட்டுக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பேருந்து சேவைகள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்: சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் முதல் வள்ளலார் நகர் வரையிலான இரு மார்க்கத்திலும் 5 பேருந்துகள் மூலமாக தலா 140 பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன.

வார நாள்களில் 10 பேருந்துகள் மூலமாக இருமார்க்கங்களில் தலா 280 பேருந்து சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, கடற்கரை ரயில் நிலையம், ஸ்டான்லி மருத்துவமனை, மின்ட் வழியாக இயக்கப்படும்.

மேலும் 30 பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாகத் திருப்பி விடப்படும் என்று கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment