Advertisment

பிளாஸ்டிக் சேர் ஃப்ரீ; கருணாநிதி விழாவுக்கு கூட்டம் சேர்க்க வேளச்சேரி தி.மு.க பலே ஐடியா

சென்னை வேளச்சேரியில் நடந்த கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கிற்கு சென்றவர்களுக்கு தி.மு.க கவுன்சிலர் பிளாஸ்டிக் சேர் இலவசமாக வழங்கிய சம்பம் அப்பகுதியில் கவனம் ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai velachery people attended karunanidhi century festive gets chairs for free Tamil News

"வெளியில் ஒரு பிளாஸ்டிக் சேரின் விலை 800 ரூபாய் வரை இருந்தது. மொத்தமாக வாங்கினால், ஒரு சேரை 400 ரூபாய்க்கே தருவதாகக் கூறினர்." என்று தி.மு.க கவுன்சிலர் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம், வேளச்சேரி விஜயநகர் முதல் தெருவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க.-வைச் சேர்ந்த 176-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தம் செய்திருந்தார். கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கூட்டம் சேராமல் இருந்தால், வெறும் நாற்காலிகளை பார்த்து தான் பேச வேண்டிய நிலை ஏற்படும். இதை தவிர்க்கவும், யாரும் எழுந்து செல்லாமல் இருக்கவும், கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஆனந்தம் புதுமையான திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

கூட்டத்துக்கு வந்தவர்கள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேர்கள் அவர்களுக்கே சொந்தம் என அறிவிப்பு வெளியிட்டு முன் கூட்டியே டோக்கனும் வழங்கியுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும், கட்சியினரும் அக்கம் பக்கத்தினரும் திரண்டு வந்து, சேர்களை தேடிப் பிடித்து உட்கார்ந்து கொண்டனர். இதனால், கொஞ்ச நேரத்தில், அரங்கம் 'ஹவுஸ்புல்' ஆகியுள்ளது. 

இது பற்றி தி.மு.க. கவுன்சிலர் ஆனந்தம் பேசுகையில், "கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு வழக்கமாக பிரியாணி பொட்டலத்துடன், குவாட்டர் சரக்குக்கான பணமாக ரூபாய் ஐநூறு வரை கொடுக்கப்படும். கூட்டத்துக்கு அழைத்து வரப்படுவோர், குவாட்டருக்கான பணத்தைப் பெற்று, குடித்து விட்டு செல்வர். கூட்டத்துக்கு வருபவர்களுக்கு, அது எந்த வகையிலும் பிரயோஜனமில்லாமல் போய் விடும்.

அதைத் தடுக்கவும், அதே நேரத்தில் அதன் வாயிலாக கூட்டத்துக்கு வருபவர்கள் மத்தியில் எனக்கான விளம்பரமும் வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்போதுதான் இப்படி பிளாஸ்டிக் நாற்காலி வாங்கிக் கொடுக்கும் யோசனை தோன்றியது. வெளியில் ஒரு பிளாஸ்டிக் சேரின் விலை 800 ரூபாய் வரை இருந்தது. மொத்தமாக வாங்கினால், ஒரு சேரை 400 ரூபாய்க்கே தருவதாகக் கூறினர்.

அதன் அடிப்படையில், 2000 பிளாஸ்டிக் சேர்களை எட்டு லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். பலர் குடும்பத்தோடு வந்து கூட்டம் முடியும் வரை அமர்ந்திருந்து, சேர்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இனி வீட்டு உபயோகப் பொருளாக அந்த பிளாஸ்டிக் சேர்கள் பயன்படும். இது என்னுடைய வருங்கால அரசியலுக்கும் பயனுள்ளதாக இருக்கும்." என்று அவர் கூறியுள்ளார். 

ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை.😂😂😂 தலைவன் - பெரிய திருடன் தொண்டன் - ஷேர் திருடன் வேளச்சேரி திமுக பொதுக்கூட்டத்தின் முடிவில் ஆளுக்கொரு நாற்காலியை எடுத்துக் கொண்டு நடையை கட்டிய மக்கள்... தலைவர்கள் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. 🤦

Posted by Vivin Bhaskaran on Wednesday, June 26, 2024

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Chennai Velacherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment