திறப்பு விழா அன்றே மூடு விழா :விதி மீறிய பிரியாணி கடைக்கு சீல்
chennai briyani shop closed: சரவணா ஸ்டோர்ஸில் ஊழியர்கள் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
chennai briyani shop closed: சரவணா ஸ்டோர்ஸில் ஊழியர்கள் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,347 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisment
இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் தி வெட்டிங் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்டது. இந்த கடை திறப்புவிழா குறித்து ஏற்கனவே யூடியூப்வில் ரிவ்யூவும் கொடுக்கப்பட்டிருந்தது. அதோடு திறப்பு விழா சலுகையாக விலையில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொது மக்கள் காலை முதலே கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது.முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்றோர் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். சிலர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டேக் செய்தனர்.
அதன்பிறகு, இரண்டு காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தினர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாது பொதுமக்கள் பிரியாணி வாங்குவதில் ஆர்வம் காட்டினர். பின்னர் சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உணவகத்தை ஆய்வு செய்து கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக கடைக்கு சீல் வைத்தனர்.
Advertisment
Advertisements
இதே போல் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பரிசோதனையில் 13 நபர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக சனிக்கிழமை எடுக்கப்பட்ட மாதிரிகளில் 26 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தங்குமிடத்தில் இருந்துதான் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .இருப்பினும் தங்குமிடமும், கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஊழியர்கள் சிலர் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news