/tamil-ie/media/media_files/uploads/2022/08/pune-1-1-1.jpg)
சென்னையில் குடிநீர் விநியோகம் இந்த ஏரியாக்களில் நிறுத்தப்படும்
Chennai Tamil News: ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று தென் சென்னைக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் வாய்ப்பு உள்ளது.
நெம்மேலியில் உள்ள 110 எம்.எல்.டி. உப்புநீக்கும் ஆலையில் பழுதடைந்த குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தென் சென்னையின் சில பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 23 ஆம் தேதி- செவ்வாய்க்கிழமை) மாலை வரை தண்ணீர் விநியோகம் தடைபடும்.
அடையாறு, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பெருங்குடி ஆகிய பகுதிகளில் மாலை 5 மணி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள், அவசர குடிநீர் தேவைக்கு, 8144930913, 8144930914 மற்றும் 8144930915 ஆகிய எண்களை தொடர்புக் கொண்டு தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.