scorecardresearch

31-ம் தேதிக்குள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை செலுத்த வேண்டும்: விவரங்கள் இதோ!

தலைமை அலுவலகத்தில் செயல்படும் சேகரிப்பு மையங்களில் காசோலை அல்லது பணமாகவும் செய்யலாம்.

water supply
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் அறிவிப்பு

வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள், நுகர்வோர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை செலுத்த வேண்டும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறியுள்ளது.

இந்த மாதத்தின் சனி மற்றும் கடைசி ஞாயிறு உட்பட அனைத்து வேலை நாட்களிலும், 8.30 முதல் மதியம் 1.30 வரை, தலைமை அலுவலகத்தில் மையங்கள் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு கூடுதல் கட்டணம், துண்டிப்பு மற்றும் பறிமுதல் செய்வதைத் தவிர்க்க, நுகர்வோர்கள் காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற இணையதளத்தில், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் அல்லது க்யூஆர் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம்.

அலுவலக மையங்களிலும், நுகர்வோர் நெட் பேங்கிங், UPI மற்றும் QR குறியீடு போன்ற பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தி வரியைச் செலுத்தலாம். தலைமை அலுவலகத்தில் செயல்படும் சேகரிப்பு மையங்களில் காசோலை அல்லது பணமாகவும் செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai water supply and sewerage tax should pay by march 31

Best of Express