எழும்பூர், புரசை, பிராட்வே... இந்த ஏரியாக்களில் 3 நாள் குடிநீர் ரத்து!
Chennai Water supply; சென்னையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பல இடங்களில், ஜூலை 16 முதல் ஜூலை 18 வரை, குடிநீர் விநியோகம் தடைபடும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
சென்னையில் எதிர்வரும் பருவமழையை முன்னிட்டு ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையில் வானல்ஸ் ரோடு சந்திப்பின் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கெனவே உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள், சென்னை குடிநீர் வாரியத்தால் இடம்மாற்றம் செய்யப்பட உள்ளது.
Advertisment
இதனால், நகரின் சில பகுதிகளில் ஜூலை 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி காலை 10 மணி வரை தண்ணீர் விநியோகம் இருக்காது.
அதன்படி வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், பிராட்வே, புதுப்பேட்டை, டிரிப்ளிகேன், பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, கெல்லிஸ், அயனாவரம், கீழ்ப்பாக்கம் கார்டன், சேத்துப்பட்டு, சத்திரம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இதனால் மக்கள் முன்கூட்டியே போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு மொபைல் நீர் விநியோகத்திற்காக பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
பகுதி பொறியாளர் / பகுதி V (8144930905); பகுதி பொறியாளர் / பகுதி VI (8144930906) மற்றும் பகுதி பொறியாளர் / பகுதி VIII (8144930908).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“