சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.
கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் இன்று (ஆக.16) மாலை முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரவு 7 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தி.நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சி.ஐ.டி. நகர், தாய்சா அடுக்குமாடி வளாகம் பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil