206 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தின் அதிகப்படியான மழை பொழிவு.. 3-வது இடத்தில் 2021!
Chennai waterlogged Wettest November in 200 years Tamil news தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் மழையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
Chennai waterlogged Wettest November in 200 years Tamil news : கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாகச் சென்னை நகரின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நவம்பர் 28-ம் தேதி வரை சென்னையில் 882.4 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இதனால், இந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு மிக அதிக மழை பொழிந்த மாதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
Advertisment
மேலும், 1918-ம் ஆண்டு சென்னையில் 1088.4 மிமீ மழைப் பதிவு செய்து முதல் இடத்தையும் நவம்பர் 2015-ல், 1049 மிமீ மழைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தையும் பிடித்ததை அடுத்து இந்த ஆண்டு அதிக மழை பொழிந்த நவம்பர் மாதத்தின் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. அக்டோபர் 1 மற்றும் நவம்பர் 28-க்கு இடையில், சென்னையில் மொத்தம் 1097.6 மிமீ மழை பெய்ததை அடுத்து 79% அதிகப்படியான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கடந்த இரண்டு மாதங்களில், தமிழகத்தில் மழை தொடர்பான செய்திகளில் குறைந்தது 106 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார். ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடையில், 209 கால்நடைகளும், 5,000-க்கும் மேற்பட்ட கோழிகளும் உயிரிழந்துள்ளதுடன், 1,139 குடிசைகளும் 189 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் மழையின் தீவிரம் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC), சென்னையில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் அதன் தீவிரம் அடுத்த நாள் முதல் லேசான மிதமானதாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil