/indian-express-tamil/media/media_files/2025/10/15/pradeep-john-rain-alert-2025-10-15-08-02-00.jpg)
Chennai Weather Update Today: இந்தியாவில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கவுள்ளதாக சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையே பிரதானமான மழைப்பொழிவை அளிக்கிறது.
இந்த சூழலில், கடலில் இருந்து அதிகப்படியான மேகக் கூட்டங்கள் சென்னை மாநகரத்தை நோக்கி நகர்வதால், மழைக்கான நடவடிக்கைகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளன. இன்று இரவு முதல் நாளை காலை வரை மழைப்பொழிவின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'தமிழ்நாடு வெதர்மேன்' அளித்துள்ள தகவலின்படி, நாளை பருவமழையின் ஆரம்பம் உறுதியாகியுள்ளதுடன், ராமநாதபுரம் முதல் சென்னை வரையிலான ஒட்டுமொத்த தமிழக கடலோர மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்யும். நாளை காலை, பருவமழையின் ஆரம்பத்தின் ஈரம் நிறைந்த நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Action starts in KTCC (Chennai) with lot of Pop ups (Clouds) moving from Sea into the Chennai City. As we go into the night to morning, it is the peak time for rains. Tomorrow the onset of the monsoon is imminent with entire Coastal districts of Tamil Nadu right from… pic.twitter.com/lfMHLw7P1Y
— Tamil Nadu Weatherman (@praddy06) October 14, 2025
இது வெறும் தொடக்கம் தான் என்றும், போகப் போக இந்த மாதத்தில் இன்னும் நிறைய 'சக்கரம்' (அதிக மழைப்பொழிவுக்கான குறியீடு) பார்க்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக மக்கள் இனி வரவிருக்கும் நாட்களில் அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ள தயாராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக கடலோர மாவட்டங்களிலும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.