Advertisment

Tamil Nadu News today updates: 'ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம்' - நடிகர்கள் விஜய், சூர்யா வேண்டுகோள்

துல்லியமாகவும், விரைவாகவும் நடப்பு செய்திகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News today live updates

Tamil Nadu News today live updates

Tamil Nadu news today live updates: சில நாட்களுக்கு கடும் உயர்வை சந்தித்த தங்கத்தின் விலை தற்போது சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது . உதாரணமாக, இன்று சென்னையில் 8 கிராம் தங்கம் ரூ 224 குறைந்து ரூ 28,672-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று, 8 கிராமின் தங்க விலை ரூ.28896.00 இருந்தது குறிப்பிடத் தக்கது.

Advertisment

இன்று, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு எட்டு பைசா உயர்ந்து  74.78 என்ற கணக்கில் விற்கப்படுகிறது. டீசல் பத்து பைசா அதிகமடைந்து 69.09 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

புதிய மோட்டார் வாகனச் சட்டம்: இந்த மாநிலங்கள் மக்களின் எதிர்ப்பை தவிர்க்க அபராதங்களைக் குறைத்தன...

இந்தி மொழியின் வரலாரையும், அதன் சமூக-அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்  விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 அன்று இந்தி  திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபை  செப்.14 ,1949-ல் இந்தியை இந்தியாவின் ஒரு அதிகாரப் பூர்வ மொழியாக அறிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், விவரங்களுக்கு இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் சமூக நிகழ்வுகள் . அரசியல் நிலவரங்கள், மற்றும் அன்றாட தகவல்களை இங்கே காணலாம்.  



























Highlights

    21:36 (IST)14 Sep 2019

    அதிமுக பிரமுகர் ஜெயக்கோபால் பிடிக்க தனிப்படை

    சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த அதிமுக பிரமுகர் ஜெயக்கோபால் பிடிக்க தனிப்படை அமைப்பு. ஜெயக்கோபால் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு வந்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை.

    21:03 (IST)14 Sep 2019

    ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம் - சூர்யா

    காப்பான் படம் வெளியாகும் போது ரசிகர்கள் பேனர் வைக்க வேண்டாம். பேனர் வைக்காமல் அந்த செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் - சூர்யா வேண்டுகோள்

    21:02 (IST)14 Sep 2019

    துரைமுருகன் கருத்து வேடிக்கையாக உள்ளது

    "நீர் மேலாண்மை குறித்த துரைமுருகன் கருத்து வேடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில்தான் காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்பட்டது. காவிரியின் குறுக்கே 5 அணைகள் கட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    21:00 (IST)14 Sep 2019

    இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி முடிக்க வேண்டும் - படக்குழுவினருக்கு கமல் அறிவுரை

    இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. 200 கோடி ரூபாய் செலவில தயாராகி வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. முதல் பாகத்தில் வரும் இளம்வயது கமலின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நல்லவராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி வேகமாக நடத்தி முடிக்க படக்குழுவை கமல் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் பட வேலைகள் வேகமெடுத்துள்ளன.

    20:35 (IST)14 Sep 2019

    பேனர்கள் வேண்டாம் - விஜய்

    வருகின்ற 19.09.19ம் தேதியன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விளம்பர பேனர்கள் வைக்க வேண்டாம் என நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

    20:02 (IST)14 Sep 2019

    டாப் 5 ஹேஷ்டேக்ஸ்

    இன்று இரவு எட்டு மணி நிலவரப்படி, இந்தியளவில் டிரண்டிங்கில் இருக்கும் டாப் 5 ஹேஷ்டேக்குகள்,

    #StopHindiImposition

    #KaappanTrailer2

    #StopHindiImperialism

    #LIVNEW

    Liverpool vs Newcastle

    #NVPTrailer

    19:58 (IST)14 Sep 2019

    காப்பான் இரண்டாவது டிரைலர் ரிலீஸ்

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் காப்பான் படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    19:25 (IST)14 Sep 2019

    அமித்ஷாவை எச்சரிக்கும் கே.எஸ்.அழகிரி

    ஒரே மொழி குறித்த கருத்தை அமித்ஷா உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இல்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் -கே.எஸ்.அழகிரி

    19:24 (IST)14 Sep 2019

    ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியா சாம்பியன்

    இலங்கையில் நடைபெற்று வந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இறுதிபோட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி வங்கதேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது, ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், நேர்த்தியாக பந்து வீசி 101 ரன்களில் வங்கதேசத்தை ஆல் அவுட் செய்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

    19:23 (IST)14 Sep 2019

    பேனர் விவகாரம் - அரசியல் கட்சிகளை பாராட்டும் நடிகர் விவேக்

    சில தொண்டர்கள் தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் காட்டுவதற்காக பேனர்கள் வைக்கின்றனர் அது தவறு. பேனர் வைக்கமாட்டோம் என்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது - நடிகர் விவேக்

    19:22 (IST)14 Sep 2019

    ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டது உறுதி

    ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

    19:21 (IST)14 Sep 2019

    இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும்?

    சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.

    இந்தி மட்டும் எப்படி

    இந்தியாவை இணைத்து விட முடியும்?

    என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    19:15 (IST)14 Sep 2019

    லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம்

    லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். பேனர் விழுந்து தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    19:12 (IST)14 Sep 2019

    சினிமா பாணியில் ஃபேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றிய நபர்

    சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் , கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் மருத்துவர் என கூறி பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் மூலம் பெண்ணை ஏமாற்றிய கார்த்திக், சொந்தமாக மருத்துவமனை வைத்திருப்பதாகவும் கூறி பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவர்களது காதல் திருமணம் வரை செல்ல, சந்தர்பத்தை பயன்படுத்திகொள்ள நினைத்த கார்த்திக் பெண் வீட்டாரிடம் 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் வரதட்சணையாக பெற்றதாக தெரிகிறது.

    இது மட்டுமில்லாமல், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும், 75 ஆயிரம் ரூபாய் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் கார்த்திக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக் வெறும் 2 ஆண்டுகள் மட்டும் மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு கோவையில் மருத்துவம் பார்த்து வந்த‌தும் தெரிய வந்த‌து. 

    18:37 (IST)14 Sep 2019

    ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு

    தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் அந்த புகைப்படத்தை சாதரணமாக தான் பதிவிட்டேன். அந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டி. ஆனால் நான் பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வேறுமாதிரி புரிந்து கொண்டனர். இதன் மூலம் சமூக வலைதள உலகில் மிகப் பெரிய பாடத்தை நான் கற்று கொண்டேன்.

    தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலவித சாதனைகளை படைத்துள்ளார். அவர் எப்போதும் கிரிக்கெட்டை பற்றி தான் யோசித்து கொண்டிருப்பார். ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. இது தொடர்பாக யாரும் எந்த வித கருத்தும் தெரிவிக்க வேண்டாம்“ என்றார்.

    18:35 (IST)14 Sep 2019

    இந்தியை திணிக்கும் முயற்சி மக்களிடம் வெறுப்பையே விதைக்கும்

    ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல.

    தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி மக்களிடம் வெறுப்பையே விதைக்கும்  என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    18:34 (IST)14 Sep 2019

    வேன் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலி 4 ஆக உயர்ந்துள்ளது.

    18:33 (IST)14 Sep 2019

    விருதுநகரில் கனமழை

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில், மல்லி ஆகிய பகுதிகளில் கனமழை.

    18:32 (IST)14 Sep 2019

    ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது

    மக்கள் அவரவர் தாய் மொழி, இணைப்பு மொழி மற்றும் விருப்ப மொழி என எம்மொழியையும் கற்கலாம்

    ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது - தமாகா தலைவர் வாசன்

    18:16 (IST)14 Sep 2019

    பேனர் வைக்க மாட்டோம் - அஜித் ரசிகர்கள்

    சுபஸ்ரீ உயிரிழப்பின் எதிரொலியாக இனி எந்த நிகழ்விலும் பேனர் வைக்க மாட்டோம் என மதுரை அஜித் ரசிகர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர். 

    18:10 (IST)14 Sep 2019

    6 லட்சத்து 53 ஆயிரம் அபராதம்

    ஒடிசாவில் புதிய போக்குவரத்து விதிகளின் படி லாரி ஓட்டுநருக்கு ரூ.6 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    18:09 (IST)14 Sep 2019

    மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 18 ஆயிரத்து 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணைக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி நான்கு ஏழு டிஎம்சியாகவும் இருக்கிறது.

    17:32 (IST)14 Sep 2019

    மத்திய அரசு ஆய்வு!

    சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில்  வரும் 23ஆம் தேதி பழவேற்காடு ஏரியில் மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது . இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையால் பழவேற்காடு ஏரியில் தற்காலிக தூர்வாரும் பணி நடக்கிறது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல்துறை ஆய்வு நடத்த வருவது மகிழ்ச்சி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    16:53 (IST)14 Sep 2019

    புதிய பாடத்திட்டம்!

    11 மற்றும் 12-ம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 மற்றும் 12- ம் வகுப்புகளில் 6 பாடங்களை 5-ஆக குறைக்க முடிவு என்பது தான் அந்த தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நடைமுறைகள் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரும் என  எதிர்பார்க்கபடுகிறது. 

    16:03 (IST)14 Sep 2019

    சுபஸ்ரீ வழக்கு!

    சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  காவல்துறையில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. 

    15:25 (IST)14 Sep 2019

    நிர்மலா சீதாராமன் பேட்டி!

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19-ம் தேதி அனைத்து பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்க புதிய திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன. நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.”  என்று கூறியுள்ளார். 

    15:11 (IST)14 Sep 2019

    உதயநிதி ஸ்டாலின் சூளுரை!

    இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்படவில்லை என்று கூறினார். தமிழக மக்களிடம் இந்தியை திணிக்க் அரசு முயற்சித்தால் அதை எதிர்க்க திமுக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 

    14:28 (IST)14 Sep 2019

    தங்கம் விலை தொடர் சரிவு!

    தங்கம் விலை சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.  இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    14:27 (IST)14 Sep 2019

    பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம்!

    சென்னையில் விதிமீறி வைக்கப்படும் பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனங்கள் இயக்கப்படும்  என மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பேனர்  விபத்தால் பறிப்போன சுபஸ்ரீ  வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. 

    14:23 (IST)14 Sep 2019

    தமிழகத்தில் கனமழை!

    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.கடலூர், விழுப்புரம், தி.மலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:20 (IST)14 Sep 2019

    இலவச மடிக்கணிணி திட்டம்

    தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணிணி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில்  உயர் வகுப்பில் படிக்கும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணிணி  வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்

    12:43 (IST)14 Sep 2019

    டிடிவி தினகரன் ட்வீட்

    5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடத்தவிருக்கும் பொதுத்தேர்வை தான் கடுமையாக எதிர்ப்பதாக அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.  பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையையும், மன வேதனையும் ஏற்படுத்தும் என்றும் கருத்து.  

    12:16 (IST)14 Sep 2019

    திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு

    திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 17) அன்று  மாலை 5 மணிக்கு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    12:06 (IST)14 Sep 2019

    பிரதமர் மோடி வாழ்த்து

    இந்தி தினத்தை முன்னிட்டு  உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் நெறிமுறைகளால் ஒரு மொழி தனக்கான அர்த்தத்தைத் தேடிகொள்கிறது. இந்த மூன்று அம்சங்களையும் இந்தி அழகாக இணைத்துள்ளது என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    11:50 (IST)14 Sep 2019

    அமித் ஷா வின் கருத்துக்கு சுப. வீரபாண்டியன் எதிர்ப்பு :

    உலக நாடுகளில் மத்தியில் இந்தியா என்ற அடையாளத்தை உருவாக்க ஹிந்தி என்ற ஒற்றை  மொழியை பிரதானப் படுத்தவேண்டும் என்ற அமித் ஷா வின் கருத்துக்கு சுப.வீரபாண்டியன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது மாநில சுயாட்சிக்கு எதிரான ஒன்று , ஒற்றுமை இந்தியாவை உடைக்க நினைக்கிறார்கள். இவர்களிடம் இது எதிர் பார்த்த ஒன்று தான், என்று கூறியுள்ளார்.   

    11:40 (IST)14 Sep 2019

    தன்னுடைய கருத்தை தெரிவித்த வைகோ :

    சந்திரயான் 2 இந்தியாவும், இஸ்ரோ சிவனும் அபார வெற்றிபெற்றுள்ளனர் இதில் கருத்து இல்லை. பேனர் கலாச்சாரம் தேவையில்லாதது என்பது தான் தனது கட்சியின் நிலைப்பாடு என்று ம் தெரிவித்தார்.5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வு வைப்பது நல்ல விஷயம். அப்போது தான் மாணவர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு வரும், ஆனால் இந்த தேர்வால் அவர்களின் படிப்பு பாலாகி விடக்கூடாது  என்ற கருத்தையும் முன்வைத்தார். 

    11:27 (IST)14 Sep 2019

    வெள்ளைக் கொடி

    இன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்தியா எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். சிறகு நேரம் கழித்து, பாகிஸ்தான் ராணுவ வீர ஒருவர் வெள்ளைக் கொடியை ஏந்திய படி இரண்டு ராணுவ வீரர்களின் உயிரை மீட்டு சென்றார்

    10:32 (IST)14 Sep 2019

    இன்று ஹிந்தி திவாஸ் :

    இந்தியாவில்  வெவ்வேறு மொழிகளைக் கொண்டிருந்தாலும் ,  உலக நாடுகளில் மத்தியில் இந்தியா என்ற அடையாளத்தை உருவாக்க ஒற்றை  மொழியை பிரதானப் படுத்துவது  மிகவும் முக்கியம்.  இன்று,  அதிக மக்களால்  பேசப்படும் இந்தி மொழியை இந்திய நாட்டின் ஒரே மொழியாய் இருக்க வேண்டும் என்று அமித் ஷா ஹிந்தி திவாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்  .இந்தியா அரசியலைமைப்பு சபை ஹிந்தியை இந்தியாவின் அதிகாரப் பூர்வ மொழியாய் ஏற்றுக் கொண்ட இந்நாளை  ஹிந்தி திவாஸ் என்ற பெயரில் கொண்டாடுவது வழக்கம். 

    09:56 (IST)14 Sep 2019

    பரியேறும் பெருமாள் சிறந்த திரைப்படம் விருது :

    புதுவையில் இந்தியத் திரைப்பட விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடந்து வருகிறது . சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'பரியேறும் பெருமாள்' படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது நேற்று வழங்கப்பட்டன.  மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியானது இந்த  ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.

    09:43 (IST)14 Sep 2019

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேவை வாரம் தொடங்கப்பட்டது

    செப்டெம்பர் 17 பிறந்த நாள் காணும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொண்டாடும் வகையில் பாஜக சேவை வாரம் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜே.பி. நடா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமையில் இந்த சேவை வாராத்தை (செப் 14-20 ) தொடங்கி வைத்தனர்.  

    09:34 (IST)14 Sep 2019

    தேசிய லோக் அதாலத் இன்று நடக்கிறது:

    இந்தியா முழுவதும்  இன்று தேசிய லோக் அதாலத் நடைபெறுகிறது. கீழே சொல்லப்பட்டுள்ள வழக்குகளில் செட்டில்மென்ட் நடக்க விருக்கிறது.  

    வங்கி தொடர்பான வழக்குகளை விசாரிக்க 8 தனி அமர்வுகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்.

    publive-image

    09:25 (IST)14 Sep 2019

      நகை பெட்டி குடோனில் தீ விபத்து

    சென்னை சவுகார்பேட்டையில்  வீரப்பன் தெருவில் அமைந்துள்ள  நகை பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  உயிர் சேதம் ஏதும் இல்லை என்று அங்கிரந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .  மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில்  தெரியவந்துள்ளது.

    09:20 (IST)14 Sep 2019

    சிபிஐ கைது

    சோமா எண்டர்பிரைசஸ் துணைத் தலைவர் பி.ஆர்.ராவ் என்பவரை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது. நிறுவனத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள விசாரணையை தனக்கு சாதமாக மாற்றுவதற்காக சிபிஐ  டிஐஜி தரவரிசை அதிகாரிக்கு 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட நடவடிக்கைகாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று   அதிகாரிகள் தெரிவித்தனர்

    Tamil Nadu news today updates: சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்ததால் அப்பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.   விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மற்றும் விதிமீறலை தடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இடைக்கால இழப்பீடை அரசு வழங்கவும், சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு முன்பாக சரணடைய தயாராக இருப்பதாக கூறி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

     

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment