Advertisment

Tamil Nadu News Highlights: மாமல்லபுரம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் ஆய்வு

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.76.38க்கு விற்பனையாகிறது.டீசல் விலை ரூ. 70.51 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sujith news live updates

Sujith news live updates

Tamil Nadu news today updates : எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, செப்டம்பர் மாதங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் அதிகாமன மழை பதிவானது. தென்மேற்கு பருவமழையால் தமிழகத்திலும் கூட தேனி,  நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்கள் நினைந்தன . வட மாநிலங்களில்  மையம் கொண்டிருக்கும் இந்த தென்மேற்கு பருவமழைக் காற்று, பின்வாங்கி வங்கக்கடல் வழியாக வரும்போது, ஈரக்காற்றாக மாறி  தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையாய் பொழியும். இந்த வடகிழக்கு பருவமழையின் முடிவைத் தான் நாம் பொங்கல் எனக் கொண்டாடுகிறோம். இந்த, வடகிழக்கு பருவமழை தொடங்குவதர்க்கான  சாதியக் கூறுகள் வரும் 20ஆம் தேதிக்கு மேல் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

Advertisment

சீன அதிபர் வரவால் மகிழ்ச்சியடையும் முக ஸ்டாலின் ; இந்திய - சீன கலாச்சாரம் குறித்து பெருமிதம்:

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளை (அக்டோபர் 26ம் தேதி) விடுமுறை நாளாகவும், தீபாவளிக்கு அடுத்த நாளை அந்தந்த பள்ளி முதல்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவித்து விட்டு விடுமுறை நாளாக அறிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வி துறை தற்போது அறிவித்துள்ளது.இதுபோன்ற முக்கிய செய்திகளைத் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    21:08 (IST)10 Oct 2019

    பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி

    சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி மாமல்லபுரம் வருவதையொட்டி, தமிழக முதலவர் பழனிசாமி மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர்: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    20:22 (IST)10 Oct 2019

    சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வருவதால் நாளை கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில்கள் நிறுத்தம்

    சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    19:45 (IST)10 Oct 2019

    இந்திய வங்கி கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை முடிவு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது - உயர் நீதிமன்றம்

    மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய தொகையை மத்திய அரசின் சட்டப்படியும் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படியும் நிர்ணயம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அகில இந்திய வங்கி கூட்டமைப்பின் சார்பில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முடிவு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    19:26 (IST)10 Oct 2019

    மாமல்லபுரத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

    சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.

    19:07 (IST)10 Oct 2019

    2 முதலீட்டாளர் மாநாடு நடத்தியதால் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அதிமுக அரசு இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியதால் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. முதலீட்டாளர் மாநாடு மூலம் வேலையில் சேர்ந்த ஒருவரை காட்டினால் உங்களை பாராட்டுகிறேன் என்று விமர்சித்துள்ளார்.

    18:44 (IST)10 Oct 2019

    ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை மனு

    ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீனுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

    17:30 (IST)10 Oct 2019

    மதுரையில் கண்காட்சி!

    கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்கான தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் -என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். 

    17:04 (IST)10 Oct 2019

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகர்க்சுக் என்பவருக்கு 2018ம் ஆண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல் ஆஸ்திரியாவை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கே என்பவருக்கு 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    16:39 (IST)10 Oct 2019

    அதிமுகவுக்கு ஆதரவு இல்லை!

    நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை  என்று புதிய தமிழகம் கட்சி  தலைவர் கிருஷ்ணசாமி  தெரிவித்துள்ளார். சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம், ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    16:26 (IST)10 Oct 2019

    சூர்யா 10 லட்சம் நிதியுதவி!

    இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் நலநிதிக்காக   நடிகர் சூர்யா ரூ. 10லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.   இதற்கான காசோலையை சூர்யா தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளையிடம் அளித்தார்.  இதனை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். 

    15:50 (IST)10 Oct 2019

    திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்!

    திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 15 நாள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே கைதான முருகனின் அக்கா மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்  சுரேஷை நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    15:39 (IST)10 Oct 2019

    கமல்ஹாசன் பேட்டி!

    சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன். தொடர்ந்து பேசிய அவர், “ சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை” என்றும் கூறினார். பேனர் எதிர்ப்பு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ” பேனரை எதிர்க்கவில்லை. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம்” என்று தெரிவித்தார். 

    15:03 (IST)10 Oct 2019

    கமல்ஹாசன் - பி.வி சிந்து சந்திப்பு!

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நேரில் சந்தித்தார்.  இந்த சந்திப்புக்கு பின்பு இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பி.வி சிந்து, “ கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி . கமல் நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவர் ” என்று கூறினார். 

    14:17 (IST)10 Oct 2019

    ரஜினிக்கு அழைப்பா?

    சீன அதிபர் வருகையின்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.  இதுவரை இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் பங்குபெற நேர்ந்தால் மோடியை ரஜினிகாந்த் சந்தித்து பேச வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. 

    14:16 (IST)10 Oct 2019

    பேனர் வழக்கு!

    பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15-ம் தேதிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை வரும் 15 ஆம் தேதி ஒத்தி வைத்தார். 

    14:12 (IST)10 Oct 2019

    திருச்சி நகைகடை கொள்ளை விவகாரத்தில் குற்றவாளி சரண்!

    திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையன் முருகன் மற்றும் அவரின் உறவினர் சுரேஷ்-க்கு முக்கிய பங்குள்ளது விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து தலைமறைவாக இருந்து வரும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில், சுரேஷ் சரணடைந்தார். 

    14:10 (IST)10 Oct 2019

    மாணவன் உதித் சூர்யாவுக்கு நீதிமன்ற காவல்!

    நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசனுக்கு வரும் அக். 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல் தொடர்கிறது.  ஏற்கனவே இருந்த அவர்களின் நீதிமன்ற காவல் முடிந்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று இருவரும்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அக். 24-ம் தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். 

    14:08 (IST)10 Oct 2019

    டெல்லியில் மோடியை சந்தித்த ராமதாஸ்!

    பாமக தலைவர் ராமதாஸ் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.     திடீரென்று ராமதாஸ் மோடியை நேரில் சந்தித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் மோடியுடன் சந்திப்பு ஏன்? என்று ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக கூறியுள்ள அவர், காவிரி - கோதாவரி திட்டத்தை நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

    13:25 (IST)10 Oct 2019

    மீன்வளத்துறை உத்தரவுக்கு தடை

    மீன் குஞ்சுகள் , பவள பாறைகள் போன்ற கடல் வளங்களை பாதுகாப்பதற்காக, விசைப்படகில் 240 எச்.பி. இன்ஜின் பயன்படுத்தக் கூடாது என்ற தமிழக மீன்வளத்துறை உத்தவரைப் பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆணையை தடை செய்து உத்தரவு  பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

    12:34 (IST)10 Oct 2019

    உயர் நீதிமன்றம் கேள்வி

    சுப ஸ்ரீவின்  தந்தை  ரவி தொடரப்பட்ட வழக்கு, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் சில நாட்களுக்கு முன்பு டிவியில் பேசிய கருத்துகளை கண்டித்துள்ளனர். காற்றின் மீது தான் வழக்கு போட வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதா? என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.      

    12:00 (IST)10 Oct 2019

    மேகதாது விவகாரம் - முதல்வர கடிதம்

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. உதாரணமாக, திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் ஏற்கனவே அனுப்பியுள்ளது.  மேகதாது அணைக்கு எதிராக  தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்   கர்நாடக அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர்.  அதன் தொடர்ச்சியாக தற்போது, மேகதாது தொடர்பான அனைத்து முடுவுகளையும் கைவிடுமாறு மத்திய அமைச்சர்களான  கஜேந்திர சிங் மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுபியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    11:10 (IST)10 Oct 2019

    காவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சிவக்குமார் மரணம்

    தமிழ்நாடு காவல்துறை காவலர் சங்கத்தின் மாநிலத்தலைவரான சிவக் குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஆவார். இவர் காவலர் சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றுவரை அங்கீகாரம் கிடைக்காமல் தமிழக காவலர் சங்கம் செயல் படாமலே இருந்து வருகிறது.

    11:05 (IST)10 Oct 2019

    தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை:

    வரும் அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் இந்தியப் பிரதமரும், சீனா அதிபரும் தமிழகம் வருவதை தொடர்ந்து ஓஎம்ஆர் போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்து, கல்வி நிருவனங்களுக்கும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்யுமாறும், சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் பிரிவு கேட்டுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில், ஓஎம்ஆர் சாலையில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த முடிவுகளை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை தற்போது அறிவுறுத்தள்ளது.

    10:54 (IST)10 Oct 2019

    சுப ஸ்ரீ வழக்கு இன்று விசாரணை:

    பேனர் விழுந்தால் தான் தனது மகள் பரிதமாய் உயிர் இழந்தால் . இதை இழப்பீடு செய்யும் விதமாக தனது குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்டம் வழங்க வேண்டும்  என்று  சுப ஸ்ரீவின்  தந்தை  ரவி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார் . இந்த வழக்கின்  விசராணை இன்று சேனை உயர் நீதிமன்றத்தில் நடை பெறவிருக்கிறது.  

    10:47 (IST)10 Oct 2019

    விராத் கோலி அரை சதம் :

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்று புனேவில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் விராத் கோலியின்  50வது டெஸ்ட் கேப்டன்சி ஆகும். எனவே,   இதற்கு   முன் 49 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகுத்த கங்குலியை முந்தினார் விராத் கோலி  

    10:06 (IST)10 Oct 2019

    இலங்கை வெற்றி

    3 ஒரு நாள் மற்றும் 3 t20 போட்டிகளில் விளையாட  இலங்கை அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்று பயணம் செய்தது. ஒருநாள் போட்டித் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  ஆனால், t20 தொடரில் பாகிஸ்தான் ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் இலங்கையிடம் தோல்வியைக் கண்டிருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த    மூன்றாவது t20 போட்டியிலும் இலங்கை வென்று இருப்பது  குறிப்பிடத்தக்கது.        

    09:58 (IST)10 Oct 2019

    இந்திய அணி பேட்டிங்

    தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்று புனேவில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியின் தரப்பில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அன்ரிச் நார்ட்ஜே என்ற வேகப் பந்து வீச்சாளர் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் களமிறக்கப் பட்டுள்ளார் .  

    09:48 (IST)10 Oct 2019

    மருத்துவர்கள் வேலை நிறுத்தம்:

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் போன்ற 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறித்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசு ஆறு வாரத்திற்குள் கோரிக்கை குறித்து முடிவெடுப்பதாக வாக்குறிதி அளித்திருந்தது.   ஆனால் , இன்னும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால் வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக  தெரிவித்துள்ளது.   

    Tamil Nadu news today updates:  மற்ற நெட்வொர்க்கிற்கு அவுட்-கோயிங் அழைப்புக்கான கட்டணத்தை நேற்று அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த, புதிய அறிவிப்பின் படி ஒரு நிமிட அவுட் கோயிங் காலுக்கு 6 பைசா வசூலிக்கப்படும். ஜியோ-ஜியோ கால்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

    50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் விதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment